CINEMA
50% கிராஃபிக்ஸ் காட்சிகளோடு வரப்போகிறான் “மாயன்”…. ரிலீஸ் தேதி அறிவிப்பு….!!

சினிமாவில் யாரும் எதிர் பாராமல் வெற்றி பெறக்கூடிய படங்கள் ஏராளம் உண்டு. அத்தகைய படங்கள் பெரும்பாலும் நம்பிக்கை என்ற ஒன்றின் அடிப்படையில் தான் உருவாக்கப்படுகின்றன. இதனை தொடர்ந்து சிறப்பான கதை மற்றும் தொழில்நுட்ப குழுவின் நேர்த்தியான படைப்புதான் அதை வெற்றிப்படமாக மாற்றும். அந்த வரிசையில் மாயன் படம் நிச்சயம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேரடியாக ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படம் மாயன். இந்த படம் ஆங்கிலம் மட்டும் இல்லாமல் தமிழ் மொழியிலும் வெளியிடப்பட உள்ளது.
ஃபேண்டஸி, திரில்லர் மற்றும் வரலாறு என மூன்றுவித ஜானரில் நகரும் விதமாக கதை எழுதப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமான காட்சிகள் கிராபிக்ஸ் முறையில் உருவாக்கப்பட்டுள்ளன,. இரண்டு பதிப்புகளாக மாயன் படத்தை உருவாக்கி உள்ளார்கள்.
ஒன்று மாயன் காலண்டர் மற்றும் உலகின் முடிவு பற்றியும், இரண்டு உலகம் அழிந்ததா? இல்லையா? மாயனுக்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம் என்பது பற்றியும் உருவாக்கி இருக்கிறார்கள். இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது இந்த வருடம் செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி படத்தை வெளியிடுவதற்கான வேலையில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.