LATEST NEWS
பிரபுவுடன் நெருக்கமாக நக்மா….! கோபத்தில் கிளம்பிய நடிகை…. காரணம் காதல் விவகாரம்…. யாருக்கு யாருடன்?….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நக்மா. அதாவது சிம்ரன் , ஜோதிகா அவர்களுக்கு முன்பு கொடிகட்டி பறந்தவர். தமிழ் மட்டும் இல்லாமல் ஹிந்தியில் மிக பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பு பெற்றது. அதிலும் தமிழில் குறிப்பாக காதலன் திரைப்படம் வெற்றியை அள்ளிக் கொடுத்தது.
தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நக்மா சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த ஒருவரை காதலித்தார் என்று சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார். அதாவது பெரிய தம்பி படத்தில் நடிகர் பிரபுவும், நடிகை நக்மாவும் ஜோடியாக நடித்தனர். அதில் ஒரு காட்சியில் பிரபுவுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகளை புகைப்படங்களாக எடுத்து விட்டதாக கோவத்தில் படப்பிடிப்பில் இருந்து கிளம்பினார் நக்மா.
ஏனெனில் அந்த நேரம் தான் அந்த முன்னணி நடிகரை காதலித்து வந்துள்ளார். பிரவுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளிவந்தால் அவரின் காதலுக்கு இடையூறாக இருக்கும் என்று கருதி படப்பிடிப்பில் இருந்து கிளம்பிவிட்டார் என்று சித்ரா லட்சுமணன் தெரிவித்திருந்தார். ஆயினும் தொடர்ந்து நக்மாவால் பல பிரச்சினைகள் வந்தது அந்த முன்னணி நடிகர் யார் என்று தெரியாவிட்டாலும் அந்த நேரத்தில் சரத்குமார் உடன் தான் நக்மாவை சேர்த்து வைத்து பல வருடங்கள் பரப்பப்பட்டு வந்தது என்று அவர் தெரிவித்துள்ளார்.