Uncategorized
கணவர் இறந்துவிட்டதாக நினைத்து’… 2-வது திருமணம் செய்து கொண்ட மனைவி 6-வருடங்களுக்கு… “பிறகு காத்திருந்த பேரத்திர்ச்சி”…?

நைஜீரியா கனோ மாகாணத்தை சேர்ந்தவர் ஹவா அலி , இவர் கணவர் பெலோ இப்ராஹிம் இந்த தம்பதிக்கு 6 குழந்தைகள் உள்ளது.
இந்நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஹவா அலியின் கணவர் இப்ராஹிமுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அவரின் சொந்த ஊருக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். அதன் பின்னர் அவரைப்பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை
சில காலம் கணவருக்காக காத்திருந்த ஹவா அலி, தனிமையில் வாழ்ந்து வந்தார் அதன் பின்னர் அவர் இறந்துவிட்டதாக முடிவு செய்து பாலா அப்துல்சலம் என்ற 40 வயது நபரை 2 வதாக கல்யாணம் செய்து கொண்டார்.
இரண்டாவது கணவருடன் ஹவாவுக்கு 3 குழந்தைகள் பிறந்தது. இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த இப்ராஹிம் உடல்நலம் தேறி சமீபத்தில் மனைவியை தேடி வந்தார். அப்போது ஹவா அலி 2 வது கணவர், குழந்தைகளுடன் வசித்து வந்ததை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து அந்த நாட்டின் சட்ட படி முதல் கணவர் உயிருடன் இருக்கும் போது 2 வது கல்யாணம் செய்வது குற்றம் என்ற நிலையில் போலீசார் ஹவா அலியை கைது செய்துள்ளனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.