LATEST NEWS
என்னமா இப்படி நடிக்கிற…. “நடுராத்திரியில் ரோட்டு கடைசியில் ஐஸ்கிரீம்”… நயன்தாரா வெளியிட்ட திடீர் வீடியோ…!!!

நடிகை நயன்தாரா நள்ளிரவில் ஐஸ்கிரீம் கடை அருகே எடுத்துக் கொண்ட வீடியோவை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார். தமிழ் சினிமாவில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி தற்போது லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. கேரளாவில் பிறந்த குழந்தை இவர் தமிழில் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

#image_title
தற்போது இயக்குனர் விக்னேஷ் இவரை திருமணம் செய்து கொண்டு இரண்டு ஆண் குழந்தைகளை வாடகை தாய் மூலமாக பெற்று அதனை வளர்த்து வருகிறார். குடும்ப வாழ்க்கையில் பிஸியாக இருந்தாலும் சினிமா துறையிலும் படு பிஸியாக நடித்து வருகின்றார். தற்போது ஜவான் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது சம்பளத்தை 12 கோடியாக உயர்த்தி இருக்கின்றார்.

#image_title
இது ஒரு புறம் இருக்க தனது தந்தையின் பிறந்த நாளை முன்னிட்டு அவரைப் பார்ப்பதற்காக கேரளா சென்றுள்ள நயன்தாரா, தனது உறவினருடன் சேர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இரவு நேரத்தில் ஐஸ்கிரீம் சாப்பிட்டு கொண்டிருக்கும் நயன்தாரா மற்றும் அவரின் உறவினர்கள் இருவரும் நயன்தாரா போஸ்டரை பார்த்துக் கொண்டே திரும்புகிறார். பார்த்தால் நயன்தாரா நிற்கின்றார். நயன் நீங்க எப்படி இங்க என்று கலாய்க்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
https://twitter.com/NayantharaU/status/1775947354727669913