LATEST NEWS
அது சூப்பர் ஹிட் படமாச்சே.. வாரிசு இயக்குனரின் படத்தில் நடிக்கும் நயன்தாரா..? ரீமேக் எப்படி இருக்க போகுதோ..!!

இயக்குனர் ராமநாராயணன் இயக்கத்தில் வெளியான பக்தி படம் ஆடி வெள்ளி. இந்த படம் 1990-ல் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம். இந்த திரைப்படத்தில் சீதா, நிழல்கள் ரவி ஆகியோர் நடித்துள்ளனர்.
மேலும் ஆடி வெள்ளி திரைப்படத்தில் யானை மற்றும் ஒரு பாம்பு நடித்துள்ளது இந்த படம் ரிலீஸ் ஆன காலகட்டத்தில் மக்களிடையே குறிப்பாக பெண்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரையரங்குகளில் ஆடி வெள்ளி திரைப்படம் நீண்ட நாட்கள் ஓடியது.
இந்நிலையில் இயக்குனர் ராமநாராயணனின் மகன் முரளி ராமசாமி ஆடி வெள்ளி திரைப்படத்தின் ரீமேக்கை இயக்கி தயாரிக்க உள்ளார். இந்த படத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
லேடி சூப்பர் ஸ்டார் என அன்புடன் அழைக்கப்படும் நயன்தாரா ஏற்கனவே மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இப்போது ஆடி வெள்ளி ரீமேக் படத்தில் நயன்தாரா நடித்தால் எப்படி இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.