கணவரை பிரிந்த பவதாரணி.. காதல் மனைவிக்காக கடைசியில் துணை நின்ற சபரி.. நெகிழவைக்கும் செயல் .. - cinefeeds
Connect with us

LATEST NEWS

கணவரை பிரிந்த பவதாரணி.. காதல் மனைவிக்காக கடைசியில் துணை நின்ற சபரி.. நெகிழவைக்கும் செயல் ..

Published

on

சில நாட்களுக்கு முன்பாக புற்று நோய்க் காரணமாக இளையராஜாவின் அன்பு மகளான பவதாரணி உயிரிழந்தார்.  திரைப்பட பின்னணி பாடகி பவதாரணி பாரதி படத்தில் மயில் போல பொண்ணு ஒண்ணு என்ற பாடலில் தொடங்கி பல பாடல்களை பாடியுள்ளார்.


கடந்த ஐந்து மாத காலமாக புற்று நோயால் அவதிப்பட்டு வந்த பவதாரணி  புற்றுநோயில் 4வது  ஸ்டேஜ் இருந்த நிலையில் தான் இளையராஜாவிற்கு தெரியவந்தது. இதனால் பவதாரணியின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கைவிட்ட நிலையில் இலங்கையில் உள்ள ஆயுர்வேத  சிகிச்சைக்காக கொழும்பூரில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனறின்றி அனுமதிக்கப்பட்ட ஒரே வாரத்திலேயே  உயிரிழந்தார்.


மேலும் பவதாரணிக்கு தனக்கு புற்றுநோய்  இருக்கிறது என்ற தகவல் ஒரு மாதத்திற்கு முன்பு தான் தெரிய வந்தது. அதற்கு முன்னதாகவே தன்னுடைய காதல் கணவர் சபரி ராஜுடன் கருத்து வேறுபாடு காரணமாக இளையராஜா வீட்டில் தான் பவதாரணி இருந்துள்ளார். பவதாரணி  2005 ம் ஆண்டு சபரி ராஜை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணமாகி பல வருடங்கள் கழித்தும் இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை; இதற்காக ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்தது குறிப்பிடத்தக்கது. பவதாரணிக்கு புற்றுநோய் இருக்கு என்ற தகவலை அறிந்ததும் சபரி ராஜ் கடந்த ஒரு மாத காலமாக பவதாரணியை விட்டு பிரியவே இல்லையாம்.

Advertisement

இந்த ஒரு மாத கால இடைவெளியில் அவர்கள் இருவருக்கும் இடையே அதீத  காதல் பரிமாற்றம்  நடைபெற்ற நிலையில் கணவர் சபரி ராஜ் எப்படியாவது பவதாரணியை காப்பாற்றி விட வேண்டும் என்று முயற்சித்துள்ளார். ஆனால் துரதிஷ்டவசமாக எவ்வளவு முயற்சி செய்தும் சிகிச்சை பலனின்றி பவதாரணி உயிரிழந்தார்.

Advertisement
Continue Reading
Advertisement