LATEST NEWS
தளபதி விஜயின் GOAT படம்… ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட சலசலப்பு…. கடும் கோபத்தில் வெங்கட் பிரபு…!!
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜயின் 68வது படத்திற்கு தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்திற்கு விஜய் 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
இந்த படத்திற்கு சித்தார்த் நுனி ஒளிப்பதிவு செய்கிறார். விஜயுடன் மோகன், பிரபுதேவா, பிரசாந்த், ஜெயராம், பிரேம்ஜி, யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். விஜய் அப்பா மகன் என டபுள் ஆக்சன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது.
வருகிற ஜூன் மாதம் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. கேப்டன் மில்லர் படத்தின் ஒளிப்பதிவாளர் சித்தார்த் நுனி தான் GOAT படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார். அவருக்கு நான்கு அசிஸ்டன்ட் இருக்கின்றனர்.
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் GOAT படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்ததில் இருந்து இதுவரை சித்தார்த் 16 முறை ஒரு குறிப்பிட்ட அசிஸ்டன்ட்டை மாற்றி உள்ளாராம். இது வெங்கட் பிரபுவுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் ஒளிப்பதிவு கதைக்களம் எப்படி இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.