LATEST NEWS
“இன்னும் கொஞ்சம் அவகாசம் தேவை, காத்திருங்கள்”…. ரசிகர்களுக்கு கேஜிஎஃப் நடிகர் யாஷ் வெளியிட்ட அறிக்கை….!!!!

கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் தான் நடிகர் யாஷ். இவரின் இயற்பெயர் நவீன் குமார் கவுடா. இவர் முதலில் மேடை நாடகங்களில் நடிக்க ஆரம்பித்து பின்னர் சின்னத்திரை சீரியலில் நடிக்க தொடங்கினார். பிறகு கன்னடத்தில் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருந்தார். இருந்தாலும் இவரை நடிப்பில் வெளியான கேஜிஎப் திரைப்படம் தான் இவரின் சினிமா வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
ஐந்து மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் 200 கோடி வசூலை தாண்டி மாபெரும் சாதனையை படைத்தது. இதனைத் தொடர்ந்து கே ஜி எஃப் இரண்டாம் பாகம் அண்மையில் வெளியானது. இதில் கதாநாயகியாக ஸ்ரீநிதி செட்டி நடித்திருந்தார். தற்போது பான் இந்தியா ஸ்டார் ஆக வலம் வருகிறார் நடிகர் யாஷ். இந்நிலையில் நடிகர் யாஷ் தனது பிறந்தநாளுக்கு முன்பாக ரசிகர்களுக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க