CINEMA
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்னும் 2 நாட்களில் வீடு திரும்புவார்… மருத்துவமனை நிர்வாகம் தகவல்…!!
உடல்நல குறைவு காரணமாக சென்னை கிரீன் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து கவலைப்படும்படி எதுவும் இல்லை என்று லதா ரஜினிகாந்த் விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் ரஜினியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், இன்னும் 2 நாட்களில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் இதயத்திற்கு செல்லும் ரத்த நாளத்தில் இருந்த வீக்கத்தை அறுவை சிகிச்சை இல்லாமல் Transcather முறையில் வெற்றிகரமாக சரி செய்யப்பட்டுள்ளது.