VIDEOS
அடடே… நடன இயக்குனர் கலா மாஸ்டரின் மகனுக்கு இப்படி ஒரு திறமையா?….. இதோ நீங்களே பாருங்க….!!!!

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள மற்றும் இந்தி உள்ளிட்ட ஏராளமான மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு நடனம் அமைத்தவர் நடன இயக்குனர் கலா மாஸ்டர். கடந்த ஏப்ரல் மாதம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடிப்பில் வெளியாகிய காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் கலா மாஸ்டர் நடித்து அசத்தியுள்ளார்.
இவர் கலைஞர் தொலைக்காட்சியில் நடத்திய மாநாடு மயிலாட நடன நிகழ்ச்சி மாபெரும் சாதனை படைத்தது. இதனிடையே கலா மாஸ்டர் கோவிந்தராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் சில காரணங்களால் அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். அதன் பிறகு கடந்த 2004 ஆம் ஆண்டு மகேஷ் என்பவரை மறுமணம் செய்து கொண்ட கலா மாஸ்டருக்கு வித்யூ என்ற ஒரு மகன் உள்ளார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
அவர் பாடுவதில் அதிகம் ஆர்வம் கொண்டவர். அவர் பாடும் வீடியோக்களை கலாம் மாஸ்டர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க