LATEST NEWS
அதற்காக மட்டும் தான் நான் நடிக்க வந்தேன்…. நடிகை பிரியா பவானி சங்கர் ஓபன் டாக்….!!!!

சின்ன திரையில் வளம் வந்த பிரியா பவானி சங்கர் பின்னர் வெள்ளி திரைக்கு அறிமுகமானார். தமிழில் மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், சூர்யாவுடன் மான்ஸ்டர், அருண் விஜயுடன் மாபியா படத்திலும் நடித்தார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திருச்சிற்றம்பலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது அகிலன், இந்தியன் 2, ருத்ரன் மற்றும் 10 தல ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.
இவ்வாறு பிசியாக இருந்து வரும் பிரியா பவானி சங்கர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தமிழில் நடிக்க வந்த போது என்னுடைய எதிர்காலம் குறித்து பெரிய திட்டம் எதுவும் இல்லை. ரசிகர்கள் என்னை ஏற்றுக் கொள்வார்களா மாட்டார்களா என்றெல்லாம் நான் கவலைப்படவில்லை. நடித்தால் பணம் வருகிறது என்று நினைத்தேன். அந்த ஒரு காரணத்திற்காக மட்டும்தான் நான் நடிக்க வந்தேன் என்று அவர் கூறியுள்ளார்.