LATEST NEWS
பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை கர்ப்பம்…. அவர் யார் தெரியுமா?…. வாழ்த்தும் ரசிகர்கள்…..!!!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் அதிக மவுசு உள்ளது. பெரும்பாலான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே ஹிட் கொடுக்கும். அந்த வகையில் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்த பிரபலமான சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் கூட்டுக் குடும்பத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தினம்தோறும் இந்த சீரியலை பார்க்கும்போது அனைவரும் கூட்டுக் குடும்பமாக வாழ வேண்டும் என்ற ஆசையை தூண்டும் விதமாக இந்த சீரியல் அமைந்துள்ளது.
அதில் நாளுக்கு நாள் நடைபெறும் சண்டைகள் ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் குடும்பத்தில் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் இருப்பதை பார்க்கும் போது மனம் நெகிழ செய்கிறது. சீரியலாக இருந்தாலும் ஒரு ரியலைஸ் ஸ்டோரியை கொண்டுவரும் வகையில் அந்த சீரியல் அமைந்துள்ளது. அதில் நடித்து வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள் தான்.
இந்நிலையில் திருமணமானதிலிருந்து குழந்தைக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் முல்லை மற்றும் கதிர் ஜோடி சமீபத்தில் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாததால் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றனர். தற்போது முல்லை கர்ப்பம் ஆகிவிட்டார் என்ற ஒரு நல்ல செய்தி வெளியாகி உள்ளது. இதுவே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்த ட்விஸ்ட் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
