LATEST NEWS
கையில் குழந்தைகளை வைத்துக்கொண்டு கணவருக்கு முத்தமிட்ட நயன்தாரா…. ரொமான்டிக் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் லேடிஸ் சூப்பர் ஸ்டார் இன்று அறியப்படும் நயன்தாரா. இவரின் நடிப்பில் அண்மையில் கணக்கு என்ற திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நடிகை நயன்தாராவிற்கும் இயக்குனர் விக்னேஷ் அவர்களுக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு பல புகைப்படங்களை வெளியிட்ட இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்களுக்கு இரட்டைக் குழந்தை பெற்றிருப்பதாக திடீரென அறிவித்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மறுபக்கம் சர்ச்சையும் கிளம்பிய நிலையில் 2016 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றதாகவும் விளக்கம் அளித்த நிலையில் சர்ச்சை முடிவுக்கு வந்தது. இந்நிலையில் சமீபத்தில் தனது இரட்டை குழந்தைகளுடன் தங்கள் நாளை கழிக்கும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் பதிவிட்டு வரும் நிலையில் தற்போது இரட்டைக் குழந்தைகளை கையில் வைத்துக்கொண்டு தனது கணவர் விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா முத்தம் கொடுக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
