CINEMA
“தளபதி 69”-ஐ நான் இயக்க நினைத்தேன்…. ஹெச்.வினோத்தை கொலை செய்வேன் – பார்த்திபன் பேட்டி….!!!

இயக்குனரும், தயாரிப்பாளரும் ,நடிகருமான பார்த்திபன் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் சோழ மன்னன் கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் தனக்கு என்ற ஒரு இடத்தை பிடித்து வைத்துள்ளார். நடிகர் மட்டுமல்லாமல் பல படங்களை தயாரித்தும் இயக்கியுள்ளார். இந்த நிலையில் தளபதி 69 படம் குறித்து பார்த்திபன் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், தளபதியின் கடைசி படத்தை நான் இயக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் அந்த வாய்ப்பை ஹெச்.வினோத் தட்டி சென்று விட்டார் .தளபதி விஜயின் கடைசி படத்தை இயக்க நான் என்ன வேண்டும் என்றாலும் செய்வேன். அதற்காக வினோத்தை கொலை செய்துவிட்டு விஜய்யிடம் சென்று வினோத் என்னிடம் தான் உதவியாளராக பணியாற்றினார். ஆனால் அவர் தற்போது இல்லை. அதனால் நான் உங்கள் படத்தை இயக்குகிறேன் என்று கூறுவேன் என்று ஜாலியாக சிரித்துக்கொண்டே கூறியுள்ளார்.