ச்சே.. “என் உயிர போனாலும் பரவாயில்லை..” நல்ல பாம்பையே கடித்துக் கொன்று எஜமானரை காப்பாற்றிய செல்லப் பிராணி..! நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ச்சே.. “என் உயிர போனாலும் பரவாயில்லை..” நல்ல பாம்பையே கடித்துக் கொன்று எஜமானரை காப்பாற்றிய செல்லப் பிராணி..! நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம்..!!

Published

on

கேரளம் மாநிலம், இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே கோட்டயம் சங்கனாச்சேரி பகுதியை சேர்ந்தவர் டோனி. விவசாயியான இவருக்கு ரெஜிமோல் என்ற மனைவியும், எலிசா (1) என்ற பெண் குழந்தையும் உள்ளனர். மேலும் இவர் ரோசி என்ற நாயையும் வளர்த்து வருகிறார். நேற்று டோனி தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வீட்டில் இருந்தார். அப்போது சமையல் அறைக்குள் நல்ல பாம்பு ஒன்று புகுந்தது. இதனை பார்த்த வளர்ப்பு நாய் ரோசி, பாம்பை நோக்கி தொடர்ந்து குரைத்துக் கொண்டே இருந்தது. சத்தம் கேட்டு டோனி அங்கு சென்று பார்த்தபோது நல்ல பாம்பு படம் எடுத்து ஆடியபடி இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த டோனி தனது நாயை வெளியே வருமாறு அழைத்தார். ஆனால் நாய் பாம்புடன் போராட தொடங்கியது.

உடனே பாம்பை பிடிக்க அப்பகுதியை சேர்ந்த சினோ என்பவரை டோனி அழைத்து வந்தார். அவர் பாம்பை பிடிக்க முயன்றபோதும், நாய் அவரை அருகில் செல்லவிடாமல் தடுத்தது. தொடர்ந்து பாம்புடன் கடுமையாக போராடிய நாய், இறுதியில் பாம்பை கடித்து கொன்றது. இந்த போராட்டத்தில் பாம்பு கடித்ததால் காயமடைந்த நாயை டோனி அருகில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

இது குறித்து டோனி கூறுகையில், “பாம்பு வீட்டுக்குள் வந்ததை எனது நாய் ரோசி எச்சரிக்காமல் இருந்திருந்தால், நானோ அல்லது எனது மனைவியோ சமையல் அறைக்குள் சென்றிருப்போம். அப்போது பாம்பு எங்களை கடித்து இருக்கக்கூடும்” என்றார். எஜமானரை காப்பாற்ற தனது உயிரையும் பொருட்படுத்தாமல் பாம்புடன் போராடிய நாயின் விசுவாசத்தை அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in