“நிமிடத்திற்கு நிமிடம் மாறும் களநிலவரம்..! பின்னடைவைச் சந்தித்த தவெக மீண்டும் மாஸ் கம்பேக்…! 6 வது சுற்றில் சத்யபாமா முன்னிலை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நிமிடத்திற்கு நிமிடம் மாறும் களநிலவரம்..! பின்னடைவைச் சந்தித்த தவெக மீண்டும் மாஸ் கம்பேக்…! 6 வது சுற்றில் சத்யபாமா முன்னிலை..!!

Published

on

தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு கடந்த 6-ந்தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை அமைதியாக நடைபெற்று முடிந்தது. இந்த இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு முடிவில் மதுராந்தகம் தொகுதியில் 86.26 சதவீத வாக்குகளும், தாராபுரம் தொகுதியில் 80.30 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன.

இன்று காலை முதல் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே தாராபுரம் தொகுதியில் தபால் வாக்குகள் மற்றும் தொடக்க சுற்றுகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை வகித்து வந்தது. இருப்பினும், அதனைத் தொடர்ந்து எண்ணப்பட்ட 4 சுற்றுகளில் த.வெ.க. பின்னுக்குத் தள்ளப்பட்டு, அ.தி.மு.க. வேட்பாளர் முன்னிலை பெற்றதால் அ.தி.மு.க. தொண்டர்கள் பெரும் உற்சாகமடைந்தனர்.

Advertisement

இந்நிலையில், தற்போது 6-வது சுற்று முடிவில் த.வெ.க. வேட்பாளர் சத்யபாமா 16,201 வாக்குகள் பெற்று மீண்டும் முன்னிலை பெற்றுள்ளார். அ.தி.மு.க. வேட்பாளர் பானுமதி 14,807 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும், தி.மு.க. வேட்பாளர் 13,797 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்திலும் உள்ளனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா 1,146 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று கள நிலவரம் நிமிடத்திற்கு நிமிடம் மாறி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in