CRIME
“இது என்ன கொடுமை..! சரக்கு போட 500 ரூபா குடு.. மறுத்த நபர்களுக்கு நேர்ந்த கொடூரம்..” நடுத்தெருவுல நடந்த துப்பாக்கிச் சூடு..! அலறி அடித்து ஓடிய மக்கள்… பதைபதைக்க வைக்கும் சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் எட்டாவா நகரில் உள்ள பக்கா பாக் பகுதியில் வியாழக்கிழமை மாலை வெறும் ரூ.500 மாமூல் தொகையை வழங்க மறுத்ததால், காரில் வந்த நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் காயமடைந்துள்ளனர். சுமன் வித்யா பீத் பள்ளிக்கு எதிரே நடந்த இந்தச் சம்பவத்தில், துர்கா காலனியைச் சேர்ந்த 28 வயதான யசோதா நந்தன் சுக்லா மற்றும் கல்யாண்பூரைச் சேர்ந்த 50 வயதான விவசாயி அரவிந்த் ராஜ்புத் ஆகியோர் கால்களில் துப்பாக்கிச் சூட்டுப் காயம் அடைந்தனர். இருவரும் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யசோதா நந்தனின் சகோதரர் சந்தன் சுக்லா அளித்த தகவலின்படி, வங்கியில் காசோலையைச் செலுத்திவிட்டுத் திரும்பிய யசோதா, சுமன் வித்யா பீத் அருகே அரவிந்த் ராஜ்புத் மற்றும் வாசு சவுத்ரியுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, ஜெய் பாரத் காலனியைச் சேர்ந்த கரண் என்ற லாலு தோமர் தன் கூட்டாளிகளுடன் நெக்சான் காரில் அங்கு வந்துள்ளார். மது அருந்துவதற்காக ரூ.500 பணம் தருமாறு அவர்கள் கேட்டுள்ளனர். பணம் தர இருவரும் மறுத்ததால், காரில் இருந்தவர்கள் கைத்துப்பாக்கியால் சுடத் தொடங்கியுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதும் அப்பகுதியில் கடும் பரபரப்பும் நெரிசலும் ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், காயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து எஸ்பி சிட்டி பபிதா சிங் மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தவர்களிடம் விசாரணை நடத்தினார். பாதிக்கப்பட்ட நபர்களுக்கும் குற்றவாளிகளுக்கும் இடையே முன்பகை எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை என்றும், மதுபோதையில் பணத்திற்காகவே இச்சம்பவம் நடந்துள்ளதாகக் கூறப்பட்டாலும், சுற்றியுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
