“பண்ணாத தப்பை ஒத்துக்க சொல்றாங்க…” பெல்ட், தடியால் அடித்து கயிற்றால் கட்டி கூரையில் தொங்கவிட்டு டார்ச்சர் செய்த காவலர்கள்! கை, கால்கள் செயல்படாமல் துடிக்கும் வாலிபர்..! பகீர் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“பண்ணாத தப்பை ஒத்துக்க சொல்றாங்க…” பெல்ட், தடியால் அடித்து கயிற்றால் கட்டி கூரையில் தொங்கவிட்டு டார்ச்சர் செய்த காவலர்கள்! கை, கால்கள் செயல்படாமல் துடிக்கும் வாலிபர்..! பகீர் பின்னணி..!!

Published

on

உத்தரப்பிரதேசம் மாநிலம் ராய்பரேலி மாவட்டத்தைச் சேர்ந்த ரவி என்ற வாலிபர், கோவில் ஒன்றில் நடந்த திருட்டு வழக்கில் காவல் துறையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். விசாரணையின் போது, செய்யாத திருட்டுக் குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் இரண்டு காவலர்கள் தன்னைத் தேர்ட் டிகிரி சித்திரவதைக்கு உள்ளாக்கியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தடியாலும் பெல்ட்டாலும் சரமாரியாக அடித்ததுடன், கயிற்றால் கட்டி கூரையில் தொங்கவிட்டுத் தாக்கியதால் தற்போது தனது கை மற்றும் கால்களை இயக்க முடியாமல் அவதியுற்று வருவதாகவும், மேலதிக மருத்துவ சிகிச்சைக்குக் கூடப் பணமின்றித் தவிப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். தனது குடும்பத்தினருடன் ராய்பரேலி மாவட்ட எஸ்பி அலுவலகத்தை அணுகி சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவர் அளித்துள்ள இந்த புகார், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் இணையத்தில் பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in