LATEST NEWS
பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் பிரபல நடிகர்…. அவரே போட்ட பதிவால் ஷாக்கான ரசிகர்கள்….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் ஒரு நல்ல குடும்ப கதையாக ரசிகர்கள் மத்தியில் பலம் வருகிறது. தினம்தோறும் தவறாமல் இந்த சீரியலை பார்ப்பதற்கே ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பாக்யா என்ற வேடத்தில் நடித்து வரும் சுசி. இந்த சீரியல் குடும்பப் பெண்களின் வாழ்க்கையை அற்புதமாக எடுத்துரைக்கிறது. வாழ்வில் எத்தனை துன்பங்கள் இருந்தாலும் குடும்ப தலைவியாக இருந்து அனைத்து குடும்ப உறுப்பினர்களையும் கட்டிக் காக்கும் பாக்யாவின் இந்த குடும்ப கதை ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஹிட் தான்.
தினம்தோறும் புது புது திருப்பங்களுடன் சீரியல் மிக விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த சீரியலில் எழில் கதாபாத்திரத்தில் மாற்றம் நடக்கும் என கூறப்படுகிறது. அதாவது எழில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஷால், எமோன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.இந்த திரைப்படம் வருகின்ற ஜனவரி எட்டாம் தேதி வெளியாக உள்ள நிலையில் அண்மையில் அதன் டீசரை விஷால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
பாக்கியலட்சுமி சீரியல் மூலம் விஷாலுக்கு நிறைய பட வாய்ப்புகள் வருவதாக கூறப்படுகிறது. இதனால் அவர் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து வெளியேற அதிக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த செய்தி அவரே ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க