CINEMA
கேப்டன் எங்களின் சொத்தல்ல…. யாரிடமும் கேட்க மாட்டோம்….. பிரேமலதா விஜயகாந்த் சொன்ன விஷயம்…!!

விஜயகாந்த் கடந்த வருடம் இறுதியில் மறைந்த போது ஒட்டுமொத்த தமிழகமே கலங்கியது. மதுரை மண்ணிலிருந்து சினிமா கனவோடு சென்னைக்கு புறப்பட்ட இவர் பிற்காலத்தில் சினிமா உலகையே கட்டி ஆண்ட வரலாறு. தன்னுடைய நடிப்பின் மூலமாக ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து வைத்திருந்தார்.
இந்நிலையில் விஜயகாந்தின் ரசிகர்கள் வரை மறக்கவில்லை என்றே சொல்லலாம். ஏனெனில் விஜய்யின் கோட் படத்தில் AI மூலமாக தோன்றினார். அதேபோல் லப்பர் பந்து படத்தில் விஜயகாந்தை கொண்டாடியுள்ளார்கள். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, திரைப்படங்களில் கேப்டனின் பாடலை, போஸ்டர்களைப் பயன்படுத்தினால் காப்புரிமையெல்லாம் யாரிடமும் கேட்க மாட்டோம். கேப்டன் எங்களின் சொத்தல்ல, மக்களின் சொத்து என்று கூறியுள்ளார்.