CINEMA
“கிண்டலா பண்றீங்க கிண்டல்” தரமான பதிலடி கொடுத்த பிரியா பவானி சங்கர்…!!

“டிமான்டி காலனி 2” படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே விமர்சனம் ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த படத்தில் நடித்துள்ள பிரியா பவானி சங்கரின் (PBS) நடிப்புக்கு ரசிகர்களின்மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்த நடிப்பு மூலம் தன்னை அதிர்ஷ்டமில்லாதவர் என விமர்சித்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
முன்னதாக, இந்தியன் 2 படத்தில் இவர் நடித்ததால் தான் அந்த படம் ஓடவில்லை என்றும், அவர் அதிர்ஷ்டமில்லாதவர் என்றும் அவரை கிண்டல் செய்த ரசிகர்களே, தற்போது பாராட்டும் மீம்ஸ்களை வெளியிட்டு, இவரை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.