VIDEOS
“காசு இருந்தா காக்கா கூட வெள்ளையாகிடும்”…. வீடியோ மூலம் ரசிகர்களை வாயடைக்க வைத்த ப்ரியா பவானி சங்கர்….!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு நிற்கும் நடிகை தான் ப்ரியா பவானி சங்கர். சின்னத்திரை சீரியல் நடிகையாக கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் கதாநாயகியாக நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தொலைக்காட்சி சேனலில் செய்தி வாசிப்பாளராக இருந்த இவர் வெள்ளை திரையில் மேயாத மான் திரைப்படத்தில் ஹீரோயினியாக அறிமுகமான நிலையில் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வந்தார்.
லட்சத்தில் சம்பளம் வாங்கி வரும் இவர் இசிஆர் பகுதியில் பெரிய பங்களா ஒன்றை கட்டி காதலருடன் சமீபத்தில் குடியேறினார். அதனைத் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் தற்போது நடித்து வருகின்றார். நடிப்பை தாண்டி தற்போது ஹோட்டல் தொழிலையும் இவர் தொடங்கியுள்ளார்.
இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் பிரியா பவானி சங்கர் ருத்ரன் படம் ரிலீஸ் ஆன பிறகு ஒரு நீண்ட பதிவை வீடியோ ஓடு சேர்த்து பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், கல்லூரி படிக்கும் போது செலவு செய்ய காசு இல்லாததால் கருப்பாக இருந்தேன் என்று கௌதம் வாசுதேவ் மேனனை பேட்டி எடுக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
காசு இருந்தா காக்கா கூட வெள்ளை ஆகிடும்னு சொல்லுவாங்க. ஆனா காசு தானா தேடி வீட்டுக்கு வராது. நீங்கதான் போராடி இந்த உலகத்திற்கு தேவையானதை பெற முடியும் என அவர் பதிவிட்டுள்ளார். மேலும் தன் காதலரான ராஜ்வேலுக்கு நன்றி கூறி ஐ லவ் யூ எனவும் தெரிவித்துள்ளார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
