LATEST NEWS
முதல் முறையாக பிக் பாஸ் வீட்டிற்குள்….! கணவனை பற்றி பேசிய ரட்சிதா….! அப்ப சண்டை எல்லாம் இல்லையா….!!!

பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ள நடிகை ரட்சிதா. முதன் முதலாக தனது கணவர் குறித்து பேசி உள்ளார். சீரியலில் பிரபலமாக நடித்து வருபவர் நடிகை ரஞ்சிதா .விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரிவோம் சந்திப்போம் இந்த சீரியல் மூலம் அறிமுகமான இவர் .அதன் பிறகு சரவணன் மீனாட்சி என்ற தொடரில் நடித்து பிரபலமானார் .இந்த சீரியலில் கிடைத்த வரவேற்பு காரணமாக தொடர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலிலும் நடித்து வர விஜய் டிவி சேனலுக்கும் இவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, வேறு சீரியலுக்கு நடிக்க சென்று விட்டார்.
அதன் பிறகு சொல்ல மறந்த கதை என்ற தொடரில் நடித்து வந்தார். இந்த தொடரும் தற்போது முடிவடைந்தது .இவரின் குடும்ப வாழ்க்கையை பற்றி கூற வேண்டும் என்றால். இவர் பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் நடித்து வந்தபோது அந்தத் தொடரில் நடித்திருந்த தினேஷ் கோபாலசாமி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு இருவரும் சீரியலில் நடித்து வந்த நிலையில் ,திடீரென்று ரட்சிதா கணவரை விட்டு பிரிந்து தாய் வீட்டில் வெகு நாட்களாக தங்கி உள்ளார். இவர்கள் இருவரும் பிரியவுள்ளதாக பலரும் கூறி வந்த நிலையில் இதற்கு அவரது கணவர் தினேஷ் மறுப்பு தெரிவித்திருந்தார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பு கூட ரட்சிதா தனது கணவர் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் திடீரென்று தனது கணவர் குறித்து பேசி இருந்தார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் ரட்சிதா புடவை கட்டிக்கொண்டு வந்தபோது அவரை அனைவரும் அழகாக உள்ளீர்கள், என்று கூற அவரும் வெட்கப்பட்டு தேங்க்ஸ் சொன்னார். மாறி மாறி இப்படி பேசிக் கொண்டிருந்தபோது உங்களின் கணவர் என்ன செய்கிறார் என்று கேட்க ஆக்டர் தான் என்று ரட்சிதாவும் பதில் கூறினார். அவர் பெயர் என்ன என்று கேட்க சொல்ல கூடாது என சிரித்துக் கொண்டே கூறினார் ரட்சிதா. பிறகு மகேஸ்வரி அவர்கள் பர்சனல் எல்லாம் கேட்கக்கூடாது. அதுவும் கேமரா முன்பு கேட்க வேண்டாம். வெளியில் போய் பேசிக்கொள்வோம் என்று கூறிவிட்டார்.