VIDEOS
தெருவுக்கு வந்த ரஜினி – விஜய் ரசிகர்கள் சண்டை… ஜெயிலர் படம் பார்க்க வந்த விஜய் ரசிகருக்கு தர்ம அடி கொடுத்த ரஜினி ரசிகர்கள்… என்ன நடந்தது?… வெளியான வீடியோ..!!

கடந்த சில நாட்களாகவே சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த சர்ச்சை பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. விஜயின் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சரத்குமார் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று கூறிய நிலையில் அது சர்ச்சையை கிளப்பியது. சரத்குமாரின் அந்த பேச்சுக்கு விஜய் ரசிகர்கள் ஒரு பக்கம் ஆதரவு தெரிவித்தாலும் ரஜினி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனால் விஜய் ரசிகர்களும் ரஜினி ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் மாறி மாறி சண்டையிட்டு வருகிறார்கள். மேலும் ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் காக்கா மற்றும் கழுகு கதையை ரஜினி கூறி மேலும் சர்ச்சையை கிளப்பினார்.
இந்நிலையில் இன்று ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் பல திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தின் முதல் காட்சி தமிழகத்தில் இன்று காலை 9 மணிக்கு திரையிடப்பட்ட நிலையில் சென்னையில் உள்ள புகழ்பெற்ற வெற்றி திரையரங்கிலும் முதல் காட்சி 9 மணிக்கு திரையிடப்பட்டது.
அப்போது விஜய் ரசிகர்கள் தியேட்டருக்கு வந்திருந்த நிலையில் அவர்களில் ஒருவர் ரஜினி ஒழிக என்று தியேட்டரில் கோஷமிட்டுள்ளார். இதனைக் கேட்டு கோபமடைந்த ரஜினி ரசிகர்கள் உடனே அவரை கடுமையாக அடித்து தாக்கியுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இணையதளத்தில் மோதி வந்த ரசிகர்கள் தற்போது நேரிலும் மோதிக்கொள்வது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Pavatha Polanthutanuka 😂pic.twitter.com/rJfzWuVzu1
— Karthik 💜🎀 (@_Karthik_Tweets) August 10, 2023