LATEST NEWS
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ராபர்ட் மாஸ்டர்…. கடைசி நேரத்தில் உஷாரான ரட்சிதா…. ஷாக்கான சக போட்டியாளர்கள்….!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் முதலில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் அடுத்தடுத்து வாரங்களில் ஜி பி முத்து, சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, விஜே மகேஸ்வரி மற்றும் நிவாஷினி என போட்டியாளர்கள் அடுத்தடுத்து வெளியேற்றப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இந்த வாரம் 15 போட்டியாளர்களுடன் பிக் பாஸ் ஒளிபரப்பாகி வந்த நிலையில் இந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் பிக்பாஸ் வீட்டை விட்டு எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்.
எலிமினேட் லிஸ்டில் கடைசி இருவராக மணிகண்டன் மற்றும் ராபர்ட் மாஸ்டர் இருவரும் இருந்த நிலையில் இறுதியில் ராபர்ட் மாஸ்டர் குறைவான வாக்குகளை பெற்றதால் எலிமினேஷன் என கார்டை காட்டி கமல் அறிவித்தார். இதற்கு முன்னதாகவே ராபர்ட் மாஸ்டர் தனக்கு வீட்டுக்கு போக வேண்டும் என ஆசைப்படுவதாக கூறியிருந்தார். இந்நிலையில் ராபர்ட் மாஸ்டர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போது அவர் அனைவரையும் வரிசையாக நிற்க வைத்து ஒருவராக கட்டிப்பிடித்து விட்டு விடை பெற்றுக் கொண்டார்.
அப்போது இறுதியாக ரச்சிதா நின்று கொண்டிருந்தார். அப்போது ராபர்ட் மாஸ்டர் வந்ததும் அவர் சற்று தூரம் விலகிச் சென்று விட்டார். அதனால் ரட்சிதாவை மட்டும் ராபர்ட் மாஸ்டர் கட்டிப்பிடிக்கவில்லை என மற்றவர்கள் கேட்டனர். அதன் பிறகு சற்று நேரம் கழித்து ரட்சிதா அவருக்கு கை கொடுத்து பாய்ய் சொல்லி வழி அனுப்பினார். ராபர்ட் மாஸ்டர் பிக்பாஸ் வீட்டில் ரட்சிதாவிடம் பல காதல் லீலைகளில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.