ஐந்து வருடம் கழித்து…. மீண்டும் கதாநாயகனாக பிரசாந்த்… என்ன சம்பளம் தெரியுமா…? - cinefeeds
Connect with us

CINEMA

ஐந்து வருடம் கழித்து…. மீண்டும் கதாநாயகனாக பிரசாந்த்… என்ன சம்பளம் தெரியுமா…?

Published

on

தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களில் ஒருவராக அறியப்பட்டவர் பிரசாந்த். இயக்குனரும் நடிகருமான தியாகராஜன் அவர்களின் மகன் தான் பிரசாந்த். 1990 ஆம் ஆண்டு வெளியான வைகாசி பொறந்தாச்சு திரைப்படத்தின் மூலமாக பிரசாந்த் கதாநாயகனாக திரை உலகில் அறிமுகமானார்.

அதன் பிறகு 2006 ஆம் ஆண்டு வரை ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள், சாக்லேட், மஜ்னு, உள்ளிட்ட பல படங்களில் பிரசாந்த் நடித்துள்ளார். பின்னர் சிறிய இடைவேளைக்கு பிறகு 2011 ஆம் ஆண்டு மம்பட்டியான், பொன்னர் சங்கர் ஆகிய படத்தில் நடித்தார்.

Advertisement

அதோடு 2018 ஆம் ஆண்டு வெளியான ஜானி திரைப்படத்தில் பிரசாந்த் கதாநாயகனாக நடித்திருப்பார். அதன் பிறகு அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை என்று கூறலாம். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரசாந்த் கதாநாயகனாக ஒரு படத்தில் நடித்துள்ளார்.

அதுதான் அந்தகன், 2018 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான அந்தாதுன் படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்து ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த படத்தை மலையாளத்தில் பிரம்மம் என்ற பெயரில் ரவி கே. சந்திரன் இயக்கி இருந்தார்.

Advertisement

ரீமேக்காக எடுத்த பிரம்மம் திரைப்படமும் மலையாள திரை உலகில் வெற்றி படமாக அமைந்தது. இந்நிலையில் தான் அந்தாதுன் படத்தின் ரைட்சை வாங்கிய நடிகரும் இயக்குனருமான தியாகராஜன் தனது மகன் பிரசாந்தை வைத்து படத்தை தயாரிக்க முடிவு செய்தார்.

படத்தை இயக்குவதற்கு இயக்குனர்கள் தேர்ந்தெடுக்கும் சமயத்தில் இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் விலகிய நிலையில் தனது மகனை வைத்து தானே இயக்கலாம் என்று தியாகராஜன் இயக்குனராகவும் களமிறங்கினார். இந்த படத்தின் கதாநாயகியாக பிரியா ஆனந்த் நடித்துள்ள நிலையில் வில்லி கதாபாத்திரத்தில் சிம்ரன் நடித்துள்ளார்.

Advertisement

மேலும் சமுத்திரக்கனி, நவரச நாயகன் கார்த்திக், ஊர்வசி, வனிதா விஜயகுமார், கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்தது. இவ்விழாவில் செய்தியாளர்கள் பிரசாந்திடம் பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளனர்.

அப்போது இந்த படத்திற்கு பிரசாந்திற்கு வழங்கப்பட்ட சம்பளம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த பிரசாந்த் இந்தப் படமே எனது சம்பளம்தான் என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Advertisement

தளபதி விஜய் அவர்கள் நடித்து செப்டம்பர் 5 திரையரங்குகளில் வெளியாக இருக்கும் கோட் திரைப்படத்திலும் பிரசாந்த் நடித்துள்ளார். அந்த படத்திற்கு பிரசாந்திற்கு சம்பளமாக ஏழு முதல் எட்டு கோடி ரூபாய் வரை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in