சினிமாவில் இருந்து ஒரு வருடம் பிரேக் எடுக்கும் சமந்தா… எவ்வளவு கோடிகளை இழக்கப் போகிறார் தெரியுமா…?? – cinefeeds
Connect with us

LATEST NEWS

சினிமாவில் இருந்து ஒரு வருடம் பிரேக் எடுக்கும் சமந்தா… எவ்வளவு கோடிகளை இழக்கப் போகிறார் தெரியுமா…??

Published

on

தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. அவரின் அடுத்தடுத்த படங்கள் பான் இந்தியா திரைப்படங்களாக வெளியாகி வருகின்றன. அடுத்தடுத்த பிரச்சனைகள் காரணமாக மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான போதிலும் தன்னுடைய மனதை வலிமையாக வைத்துக் கொண்டு சமந்தா வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறார்.

இவ்வாறு தெலுங்கு மற்றும் இந்தி என அடுத்தடுத்து மொழிகளில் பிஸியாக நடித்து ரசிகர்களின் கனவு கண்ணியாக திகழ்ந்துவரும் சமந்தாவிற்கு ஹிந்தியில் ஃபேமிலி மேன் 2 தொடர் மிகவும் சிறப்பாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது சிட்டாடல் இந்தியா தொடரில் நடித்துள்ளார். இதன் படபிடிப்பை முடித்த பிறகு சமந்தா தான் நடிப்பிலிருந்து சிறிது காலம் ஓய்வெடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

Advertisement

ஏற்கனவே முதலில் ஒரு வருடம் ஓய்வெடுக்க உள்ளதாக அறிவித்த நிலையில் தற்போது ஆறு மாத காலம் என்று கூறப்படுகிறது. இந்த விடுமுறையில் அமெரிக்கா செல்ல உள்ள சமந்தா தனது அரிய வகை நோய்க்கு சிகிச்சை எடுக்க உள்ளார். மேலும் இந்த ஓய்வு காலத்தில் சமந்தா ஆன்மீக உள்ளிட்ட வழிகளில் தனது மனதை செம்மைப்படுத்த உள்ளார்.

இந்நிலையில் ஒரு வருடத்தில் படங்களில் நடிக்காததால் சமந்தாவிற்கு சுமார் 12 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. ஒரு படத்தில் நடிப்பதற்கு சுமார் 4 கோடி ரூபாய் வரை சம்பளம் பெற்று வரும் சமந்தா அடுத்த ஒரு ஆண்டில் ஏற்படும் இழப்பை தவிர்க்க முடியாது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in