LATEST NEWS
மாஸாக உருவாகும் சிவகார்த்திகேயனின் அமரன் படம்.. உண்மையான ஹீரோ யார் தெரியுமா..? மனைவியின் உருக்கமான பதிவு..!!

பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் தனது 21-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு அமரன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
சிவகார்த்திகேயன் முகுந்த் வி என்ற ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் யார் தெரியுமா..? கடந்த 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்களை எதிர்த்து தாக்குதல் நடத்திய ராஷ்டிரிய ரைஃபில்ஸ் ராஜ்புத் ரெஜிமெண்ட் பிரிவுக்கு தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் தலைமை வகித்தார்.
முகுந்த் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த வீட்டை தாக்கி இரண்டு பேரை கொன்றார். இதனையடுத்து ஒரு பயங்கரவாதி சுட்டதால் முகுந்த்தன் உடலில் குண்டு பாய்ந்தது. இதற்கிடையே மற்றொரு பயங்கரவாதியை முகுந்த் சுட்டுக் கொலை செய்து வீரமரணம் அடைந்தார். அவருக்கு அசோக சக்ரா விருது கொடுக்கப்பட்டது. இந்த கதையை தழுவியே அமரன் திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்நிலையில் முகுந்த் வரதராஜனின் மனைவி ரெபக்கா வர்கிஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, அமரன் நித்தியமானவன். இதை எப்படி சொல்வது என ஆயிரம் முறை யோசித்தேன். 10 ஆண்டுகள் கடந்து விட்டது. இப்போது அவரது நினைவுகளையும் தேசபக்தியையும் வெள்ளி திரையில் பார்ப்பதற்கு ஆவலோடு இருக்கிறேன். இந்த உற்சாகம் அழியாத துயரத்துடன், மாறாத நம்பிக்கையுடன், எல்லையற்ற அன்புடன் கலந்திருக்கும். விலை மதிப்புள்ள ஒன்றை ஒரு தகுதியான காரணத்திற்காக இழந்து விட்டோம். ஜெய்ஹிந்த். என பதிவிட்டுள்ளார்.