LATEST NEWS
சிவகார்த்திகேயனுக்காக தமிழ் கற்று கொண்ட பாடகி.. சூப்பர் சிங்கர் போட்டியாளரின் ஆசையை நிறைவேற்றிய சிவா.. வைரலாகும் வீடியோ..!!

முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தற்போது அமரன் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது தற்போது 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்தது. இன்னும் 20 சதவீதம் மட்டுமே மீதம் உள்ளது என கூறப்படுகிறது. இதற்கிடையே ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கான பூஜை சமீபத்தில் நடந்தது.
அமரன் படத்தின் ஷூட்டிங் முடித்துவிட்டு ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் பட ஷூட்டிங்கில் சிவகார்த்திகேயன் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் கேரளாவைச் சேர்ந்த தன்ஷிரா என்பவர் தற்போது எம்.ஏ படித்து வருகிறார்.
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் சீசன் 10-ல் போட்டியிட்டு வருகிறார். அவருக்கு சிவகார்த்திகேயனை மிகவும் பிடிக்கும். சிவகார்த்திகேயனை சந்தித்து பேச வேண்டும் என்ற ஆசையில் தமிழ் கற்றுக்கொள்ள ஆரம்பித்ததாக ஒரு முறை அவர் கூறியிருந்தார். இந்நிலையில் தன்ஷிராவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் சிவகார்த்திகேயன் அவரை சந்தித்து பேசி உள்ளார்.
அந்த வீடியோ பதிவு இந்த வாரம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான ப்ரோமோ வீடியோவில் தன்ஷிலா சிவகார்த்திகேயனை சந்தித்து அவரை கண்ணீருடன் கட்டி அணைத்து க்கொண்டார். இருவரும் உரையாடும்போது சிவகார்த்திகேயன் இவர் என் சகோதரி. பார்த்து மார்க் போடுங்கள் என நிகழ்ச்சி நீதிபதிகளிடம் கூறியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
#Prince @Siva_Kartikeyan ‘s Love towards his fans ❤️ Super Singer fame #Thanseera met #Sivakarthikeyan in person 😍#SK #PrinceSK #SuperSinger pic.twitter.com/yvi3Pkf3ZK
— Vasanth SKFC (@Vasanth_SK_) February 20, 2024