தென்னிந்திய திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். அன்னையின் இவரது நடிப்பில் சாணி காகிதம் என்ற திரைப்படம் தமிழில் வெளியாகியது. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தெலுங்கில் சர்க்காரு வாரி பாட்டா , மலையாளத்தில் வசி ஆகிய இரண்டு படங்களும் தொடர் தோல்வியை சந்தித்தது. தற்போது மாமன்னன் என்ற திரைப்படத்தை கீர்த்தி சுரேஷ் கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில் சினிமாவில் இருந்து கீர்த்தி சுரேஷ் விலக இருப்பதாக சமீபத்தில் ஒரு செய்தி இணையத்தில் வெளியானது. தற்போது பெற்றோர்களால் மாப்பிள்ளை பார்க்கப்பட்டு நிச்சயம் முடிந்ததாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது. சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் தனது குடும்பத்துடன் திருநெல்வேலியில் உள்ள பாரம்பரிய வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் கீர்த்தி சுரேஷுக்கு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்து விட்டதாக கூறப்பட்டது.

இது தொடர்பாக கீர்த்தி சுரேஷ் தரப்பிலிருந்து இதுவரை எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை. இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் பட்டுப்புடவையில் கலக்கும் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

keerthysuresh🔘 இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@keerthisuresh_offical_fan)