VIDEOS
“இவர் இல்லனா நான் யாருன்னு யாருக்கும் தெரியாது”… உருக்கமாக பேசி திடீரென நெல்சன் காலில் விழுந்த பாடல் ஆசிரியர் சூப்பர் சூப்பு… வைரல் வீடியோ..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெளியாகி ஒரே வாரத்தில் 400 கோடி வசூல் குவித்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றி கொண்டாட்டம் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. அதில் நடிகர்கள் வசந்த் ரவி, சுனில் வருமா, நடிகை மிர்னா மேனன், இயக்குனர் நெல்சன் மற்றும் பாடலாசிரியர் சூப்பர் சுப்பு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அதில் பேசிய சூப்பர் சுப்பு, நான் என்ன பேசப் போகிறேன் என்ற ஐடியாவை எனக்கு இல்லை. முதலில் இயக்குனர் நெல்சனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
காரணம் இந்த பாடல் எழுதும் வரை நான் யார் என்று கூட உங்களுக்கு தெரியாது. இந்த வாய்ப்பு கிடைத்ததற்கு மிகவும் நன்றி. என்னை அடையாளம் கண்டு இந்த படத்திற்காக பணியாற்ற வைத்த அனிருத்துக்கு மிகவும் நன்றி. அனைத்திற்கும் மேல் ரஜினி ரஜினியாக இருந்ததற்கு நன்றி. இதையெல்லாம் உருவாக்கிக் கொடுத்த நெல்சனுக்கு நன்றி என்று கூறிவிட்டு அவரின் காலில் விழுந்து சூப்பர் சுப்பு கும்பிட்டார். இந்த சம்பவம் சற்று பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது.