VIDEOS
தமிழ் சினிமாவில் வில்லனாக கலக்கும் மலையாள நடிகர்கள் யார் யார் தெரியுமா?… ஒரு சிறப்பு தொகுப்பு..!!

பொதுவாகவே சினிமாவை பொறுத்தவரையில் பல மொழிகளில் இருந்து தமிழ் சினிமாவில் நுழைந்து தற்போது முன்னணி நடிகைகளாக கலக்கிக் கொண்டிருக்கும் நடிகைகள் பலரும் உள்ளனர். குறிப்பாக மலையாளத் திரையுலகில் இருந்து தமிழ் சினிமாவில் தற்போது நடிகைகள் பலரும் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அதனைப் போலவே மலையாளத் திரையுலகம் தமிழ் சினிமாவிற்கு ஏராளமான வில்லன்களையும் தந்துள்ளது. அதாவது கேரளாவில் இருந்து வந்து தற்போது தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் வில்லன்களாக நடித்து மிரளவைத்த நடிகர்கள் ஏராளம். சமீபத்தில் கூட ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் மலையாள நடிகரான விநாயகன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த மிரட்டி இருந்தார்.
அதனைப் போலவே உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படத்திலும் பகத் பாசில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். அவ்வாறு தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்து மிரளவைத்த நடிகர்கள் யார் யார் என்பது குறித்து இதில் பார்க்கலாம்.