VIDEOS
செருப்புடன் தேசியக்கொடி ஏற்றிய நடிகை.. விமர்சித்தவர்களுக்கு ஒத்த வார்த்தையில் பதிலடி கொடுத்த ஷில்பா ஷெட்டி… வைரல்..!!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஷில்பா செட்டி. இவர் பாஜிகர் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் ஹென்றியான இவர் இந்தியில் பல்வேறு முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான பிரபுதேவா உடன் இணைந்து 1996 ஆம் ஆண்டு மிஸ்டர் ரோமியோ என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தின் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமான இவர், அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களுடன் படங்களில் நடித்தார்.
விஜய் நடிப்பில் வெளியான குஷி திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருப்பார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட முதலிட்ட பழமொழி படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. சினிமாவில் பிஸியாக வலம் வந்த நடிகை ஆன இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு தொழிலதிபர் ராஜ் குந்த்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 2012 ஆம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்த நிலையில் இரண்டாவது குழந்தையை வாடகை தாய் மூலம் பெற்றுக்கொண்டனர். சினிமாவை ஓரம் கட்டியுள்ள ஷில்பா செட்டி தற்போது குடும்பத்துடன் செட்டில் ஆகியுள்ளார்.
இந்நிலையில் நேற்று சுதந்திர தின விழாவை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் வீட்டில் கொடியேற்றிய வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்த நிலையில் ஷில்பா ஷெட்டி தனது குடும்பத்துடன் வீட்டில் கொடியேற்றி சுதந்திர தின விழாவை கொண்டாடினார். அது தொடர்பான வீடியோவில் ஷில்பா ஷெட்டி செருப்பு அணிந்து கொண்டு தேசியக்கொடி ஏற்றிய அதை நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வந்த நிலையில் தற்போது அதற்கு ஷில்பா ஷெட்டி விளக்கம் அளித்துள்ளார். அதாவது செருப்பு அணிந்து கொண்டு தேசியக்கொடி ஏற்றக்கூடாது என்று சட்டம் ஒன்றும் கிடையாது என்று கூறி அவர் ஒத்த வார்த்தையில் பதிலடி கொடுத்துள்ளார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க