LATEST NEWS
‘பல படங்களில் கதாநாயகிகளின்’ : “தந்தை நடித்த பிரபல நடிகர் வீட்டில் பரிதாப மரணம்”! சோகத்தில் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் கதாநாயகியின் தந்தை கதாபாத்திரத்தில் அதிகப்படியான படங்களில் நடித்த நடிகர் K.K.P.கோபால கிருஷ்ணன் இவர் சசிகுமார் படமான நாடோடிகள் படத்தில் நாயகி அனன்யாவின் தந்தையாக நடித்து மிகவும் பிரபலமானார். அதைத்தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் , நம்பவிட்டு பிள்ளை , ரஜினி முருகன் , சீமராஜா போன்ற படங்களில் ஹீரோயினின் தந்தையாக கச்சித்தமாக நடிக்க கூடியவர் K.K.P.கோபால கிருஷ்ணன்.
ஈரோடு மாவட்டம் குப்பகவுண்டம் பாளையம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் K.K.P.கோபால கிருஷ்ணன். இவர் நடுத்தர குடும்பத்தை சார்ந்த சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஈரோட்டில் இருந்து சென்னைக்கு கிளம்பி வந்து பலபேரை சந்தித்து படவாய்ப்புப் பெற்று பின்னர் குணசித்திர நடிகராக உருவெடுத்தார்.
படப்பிடிப்பு தவிர்த்து மற்ற நாட்களில் ஈரோட்டில் இருக்கும் தனது சொந்த கிராமத்தில் தான் வசித்து வருகிறார். அந்த வகையில் நேற்று இரவு தூங்கியவர் தீடிர் என்று இன்று அதிகாலையில் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக வீட்டிலேயே உயிரிழந்தார்.