LATEST NEWS
தளபதியின் அடுத்த மாஸ் என்ன? லீக்கான ரகசியம்

கல்லூரி பேராசியராக இளமையான தோற்றத்தில் விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படம் வரும் ஏப்ரல் 9 ம் தேதி தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாகவுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. டப்பிங் வேலைகள் தொடங்கிவிட்டன. டீசர் வேலை நடைபெற்று வருவதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு அண்மையில் கல்லூரி விழாவில் கூறியிருந்தார்.
இந்த நிலையில் அனிருத் இசையில் அண்மையில் குட்டி ஸ்டோரி பாடல் வெளியானது. விஜய் பாடியுள்ள இந்த பாடல் 25 மில்லியன் பார்வைகளை கடந்து like மற்றும் comment அள்ளிவருகிறது.
தற்போது இப்படத்தின் இசை வேலைகளில் முக்கிய இசைக்கலைஞரர் கெபா ஜெராமியா இணைந்துள்ளாராம். சூப்பரான ஒரு கூலான பாடல் காத்திருக்கிறது என ரசிகர்களுக்கு சர்ப்பிரைஸ் கொடுத்துள்ளார்.