“ஆரம்பத்துல அதிரடி சரவெடி.. கடைசியில ஏமாற்றம்…” EPS-க்குத் தொடரும் தேர்தல் சாபம்.. மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்ட அதிமுக.. அதிர்ச்சியில் தொண்டர்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஆரம்பத்துல அதிரடி சரவெடி.. கடைசியில ஏமாற்றம்…” EPS-க்குத் தொடரும் தேர்தல் சாபம்.. மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்ட அதிமுக.. அதிர்ச்சியில் தொண்டர்கள்..!!

Published

on

தமிழகத்தில் நடக்கும் பொதுத்தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆரம்பத்தில் பெரும் மகிழ்ச்சியைக் கொடுப்பது போல் தொடங்கி, இறுதியில் ஏமாற்றத்தையே அளிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். கடந்த சட்டமன்றப் பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போதும், தொடக்கத்தில் அ.தி.மு.க கூட்டணி மிக பலமாக 80-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்து அசத்தியது. ஆனால், வாக்கு எண்ணிக்கை அடுத்தடுத்த சுற்றுகளுக்கு நகர்ந்த போது அ.தி.மு.க-வின் முன்னிலை சரிந்து, தேர்தல் களம் ஒட்டுமொத்தமாக மாறியது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்றதொரு ஏமாற்றப் போக்கு தற்பொழுது நடந்து வரும் தாராபுரம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையிலும் அ.தி.மு.க-விற்கு அரங்கேறியுள்ளது. தாராபுரத்தில் தபால் வாக்குகள் மற்றும் தொடக்கச் சுற்றுகளின் முடிவில் அ.தி.மு.க வேட்பாளர் பானுமதி முதலிடத்தைப் பிடித்து சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாகத் தனது ஆதிக்கத்தைத் தக்க வைத்திருந்தார். ஆனால், தற்போதைய நிலவரப்படி அ.தி.மு.க தனது முன்னிலையை இழந்து, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் தி.மு.க-விற்கு அடுத்தபடியாக மூன்றாம் இடத்திற்குப் பின் தள்ளப்பட்டுள்ளது அ.தி.மு.க தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in