“இவங்களை திருத்தவே முடியாது…” நீதிமன்றத்தில் சிரித்தபடியே நின்ற கொடூரன்..! தூக்குத் தண்டனை விதித்து நீதிபதி அதிரடி உத்தரவு..!! – cinefeeds
Connect with us

CRIME

“இவங்களை திருத்தவே முடியாது…” நீதிமன்றத்தில் சிரித்தபடியே நின்ற கொடூரன்..! தூக்குத் தண்டனை விதித்து நீதிபதி அதிரடி உத்தரவு..!!

Published

on

சத்தீஸ்கர் மாநிலம் சூரஜ்பூர் மாவட்டத்தில் ஹெட் கான்ஸ்டபிள் தாலிப் ஷேக்கின் மனைவி மற்றும் 10 வயது மகளை கொடூரமாகப் படுகொலை செய்த வழக்கில், சூரஜ்பூர் ஃபாஸ்ட் டிராக் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் பிரகாஷ் வாரியர் முக்கிய குற்றவாளி குல்தீப் சாஹூ உட்பட மூன்று பேருக்கு தூக்குத் தண்டனையும், ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளார். 2024 அக்டோபரில் நடந்த இந்த வழக்கில், ஆதாரங்கள் இல்லாததால் வழக்கில் தொடர்புடைய மற்ற இருவர் விடுவிக்கப்பட்டனர். கொடூரமான இக்குற்றத்திற்காக குல்தீப் சாஹூ, பூல் சிங் மற்றும் சந்திரகாந்த் சௌத்ரி ஆகியோருக்கு மரண தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்தக் கொடூர சம்பவத்திற்குப் பின்னால் காவல்துறையுடனான பழைய பகை மற்றும் பழிவாங்கும் உணர்ச்சியே காரணமாக இருந்தது. அக்டோபர் 9, 2024 அன்று இரவு ஒரு நிகழ்ச்சியில் குல்தீப்பின் சகோதரர் சந்தீப் சாஹூவிற்கும் உள்ளூர் இளைஞர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் சந்தீப்பை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த குல்தீப், ஏற்கனவே தனக்கு எதிரியாக இருந்த ஹெட் கான்ஸ்டபிள் தாலிப் ஷேக்கைப் பழிவாங்கத் திட்டமிட்டு, அவர் பணிக்குச் சென்றிருந்த நேரத்தில் அவரது வீட்டிற்குள் தனது கூட்டாளிகளுடன் அத்துமீறி நுழைந்தான்.

Advertisement

அங்கு பிணைக்கைதிகளாகப் பிடிக்கப்பட்ட ஹெட் கான்ஸ்டபிளின் மனைவி மெஹு ஃபைஸ் மீது 33 முறையும், 10 வயது பெண் குழந்தை மீது 28 முறையும் கத்தியால் சரமாரியாகக் குத்தி கொடூரமாகக் கொலை செய்தனர். பின்னர் தடயங்களை மறைக்க இருவரின் உடல்களையும் புதரில் வீசிவிட்டுத் தப்பினர். விசாரணையின் போது நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட போது, தான் செய்த செயலுக்கு எந்தவித மனவருத்தமும் இன்றி ஊடகக் கேமராக்களைப் பார்த்து சிரித்தபடி போஸ் கொடுத்த குல்தீப்பின் கொடூர மனநிலையைக் குறிப்பிட்ட நீதிபதி, இவ்வளவு கொடூரமான குற்றத்தைச் செய்துவிட்டுச் சிரிக்கும் குற்றவாளிகளிடம் எந்தச் சீர்திருத்தமும் சாத்தியமில்லை எனக் கூறி இத்தீர்ப்பை வழங்கினார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in