CRIME
“அப்பா.. அப்பா.. அப்பா..” மரணப் படுக்கையில் உறைந்த கடைசி வார்த்தை.. 25 வயதுமாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. உலகையே உலுக்கும் சோகம்..!!
ஈரான் நாட்டின் மிகக் கொடூரமான சர்வாதிகார ஆட்சியாளரான கமேனியின் பாதுகாப்புப் படையினரால், 25 வயதே ஆன மைக்ரோபயாலஜி மாணவியான மினா அமீர்சாதே என்ற இளம் பெண் தொண்டையில் சுடப்பட்டுக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அந்தப் பாதுகாப்பற்ற தருணத்தில், இரக்கமற்ற அந்த அரக்கர்கள் அவரை நோக்கி அடுத்தடுத்து மூன்று முறை துப்பாக்கியால் சுட்டுத் தீர்த்துள்ளனர். மரணத்தின் விளிம்பில் நின்று, தப்பிக்க வழியே இல்லாத அந்தப் பயங்கரமான நொடியில், அவர் தனக்குக் கிடைத்த கடைசி மூச்சைக் கொண்டு தனது தந்தையை மட்டுமே தஞ்சமாக நினைத்துக் கதறியுள்ளார்.
துப்பாக்கிக் குண்டுகள் உடலைத் துளைத்த அந்தக் கொடூரமான கடைசி நிமிடங்களில், அந்த இளம்பெண் “அப்பா… அப்பா… அப்பா…” என்று தனது இறுதி மூச்சு பிரியும் வரை கதறி அழுத வார்த்தைகள், தற்போது சர்வதேச அளவில் கேட்போர் நெஞ்சைப் பதறவைத்துள்ளது. மனிதநேயமற்ற முறையில் அரங்கேறியுள்ள இந்தத் துயரச் சம்பவம், அங்குள்ள ஒடுக்குமுறை ஆட்சிக்கு எதிராகவும், மனித உரிமைகளுக்காகவும் போராடும் உலகெங்கிலும் உள்ள மக்களின் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
