CINEMA
நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது…. மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை…!!

உடல்நல குறைவு காரணமாக சென்னை கிரீன் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து கவலைப்படும்படி எதுவும் இல்லை என்று லதா ரஜினிகாந்த் விளக்கம் அளித்திருந்தார். மேலும் இன்று அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்தது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.