TRENDING
“இதுக்கு பேரு தான் 10 வருட நட்பா”…. பிக்பாஸ் வீட்டில் மைனா செய்த செயலால்…. செம கடுப்பாகி பதிவு போட்ட ரட்சிதாவின் கணவர்….!!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட எட்டு வாரங்களை கடந்துள்ள இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டு தற்போது 13 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் உள்ளனர்.
அதே சமயம் இந்த வாரம் டபுள் எலிமினேஷன் கண்டிப்பாக நடைபெறும் என கமல் தெரிவித்த நிலையில் போட்டியாளர்கள் அனைவரும் டென்ஷனில் உள்ளனர். அதே சமயம் அந்த இரண்டு போட்டியாளர்கள் யார் என்பது குறித்து ரசிகர்கள் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இருந்தாலும் அது யார் என்பது குறித்த தகவல் இந்த வாரம் இறுதியில் தான் தெரிய வரும் .
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ரட்சிதாவுக்கு அவரின் கணவர் தொடர்ந்து ஆதரவுகளை தெரிவித்து வரும் நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் மணிகண்டனிடம் தனிமையில் பேசிய போது மைனா, சரவணன் மீனாட்சி சீரியலில் சூட்டிங் சமயத்தில் இது செய் அது செய் என எனக்கு கண்டிஷன் போட்டு ரக்ஷிதா ரொம்ப ஓவரா பண்ணுவாங்க என கூறி இருந்தது மட்டுமல்லாமல் ஏலியன் மற்றும் பழங்குடியினர் டாஸ்கின் போது ரட்சிதாவை உட்கார வைத்து பல கேள்விகளை மைனா எழுப்பினார். இதற்கு ரக்ஷிதாவின் கணவர் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில் தனது மனைவிக்கு முழு ஆதரவையும் அவர் தெரிவித்து பகிர்ந்து இருப்பது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
