TRENDING
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதும் மகளை சந்தித்த ராபர்ட் மாஸ்டர்…. பலரையும் நெகிழ வைத்த புகைப்படம் இதோ….!!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வாரமும் புதுவிதமான டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டு வரும் நிலையில் நாளுக்கு நாள் சண்டை சச்சரவுகளுடன் போட்டி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பல போட்டியாளர்களும் கலந்து கொண்டுள்ள நிலையில் இதில் ஒரு சில போட்டியாளர்கள் தற்போது வெளியேறியுள்ளனர்.
அப்படி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அண்மையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியவர்தான் ராபர்ட் மாஸ்டர். அவரைத் தொடர்ந்து கடந்த வாரம் குயின் சி வெளியேறிய நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் சென்றதும் குயின்சி ராபர்ட் மாஸ்டரை சந்தித்து பேசினார். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது ராபர்ட் மாஸ்டர் அவரை மகள் என கூறி வந்த நிலையில் தற்போது குயின்சியை சந்தித்த போட்டோவை ராபர்ட் மாஸ்டர் நிகழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
