LATEST NEWS
ரச்சிதாவுக்கு மிகவும் பிடித்தது இவரை தான்?…. அமைதியாக இருங்கள்….. புகைப்படத்துடன் கணவர் தினேஷ் போட்ட பதிவு….!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 70 நாட்களை கடந்து இந்த நிகழ்ச்சி 9 போட்டியாளர்களுடன் சென்று கொண்டிருக்கிறது. முதலில் 21 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற தற்போது ஒன்பது போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில் நேற்று மீதமுள்ள போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்கு வருகை தந்தனர்.
அவ்வகையில் நேற்று மைனா நந்தினியின் குழந்தை மற்றும் கணவர் மற்றும் தம்பி என மூவர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தனர். ஆனால் ரட்சிதாவின் குடும்பத்தில் யார் வரப்போகிறார் என்று ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். அதற்கு காரணம் என்னவென்றால் ரட்சிதா அவருடைய கணவர் தினேஷை பிரிந்து இருக்கும் நிலையில் அவருடைய கணவர் அவருக்காக அதிகமாக சமூக வலைத்தளத்தில் சப்போர்ட் செய்து கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். இவர் வெளியே செய்யும் வேலைகள் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ரட்சிதாவுக்கு தெரிய வாய்ப்பு இல்லை.
அதனால் உள்ளே தினேஷ் என்றவுடன் ரட்சிதாவின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இந்நிலையில் தினேஷ் கார்த்திக் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ரச்சிதா ஆசையாக வளர்த்து வரும் பூனைக்குட்டியின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உங்களிடம் எதுவும் சொல்ல முடியாத போது நீங்கள் எதுவும் சொல்லாதீர்கள் என்று பதிவு போட்டுள்ளார். அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.