VIDEOS
“பிக்பாஸ் வீட்டில் இதுதான் நடந்தது”…. வெளியே சென்றதும் ஆயிஷா வெளியிட்ட முதல் வீடியோ…. வைரல்…..!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் 60 நாட்களைக் கடந்து தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் முதலில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு போட்டியாளர்களும் ஒவ்வொரு வாரம் எலிமினேஷன் செய்யப்பட தற்போது 11 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளன.
கடந்த வாரம் டபுள் எலிமினேஷன் நடைபெற்ற நிலையில் ராம் மற்றும் ஆயிஷா இருவரும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதனை தொடர்ந்து இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார்கள் என ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு ஆயிஷா அளித்த முதல் பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.