CINEMA
ஜீ தமிழில் பிரபல சீரியலிலிருந்து விலகும் ஹீரோ-ஹீரோயின்….? வைரலாகும் ஷாக்கிங் நியூஸ்…!!!

பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழில் அண்ணன் தங்கைகளின் பாசத்தை மாட்டும் விதமாக ஒளிபரப்பாகி வரும் தொடர் அண்ணா. மிர்ச்சி செந்தில்- நித்யா ராம் முதன்முறையாக இந்த சீரியலில் ஜோடி சேர்ந்துள்ளார்கள். இந்த தொடர் கடந்த 2023 ஆம் வருடம் மே மாதம் ஆரம்பிக்கப்பட்டது. துர்கா சரவணன் இயக்கத்தில் 400 எபிசோடுகளுக்கு மேல் தற்போது வெற்றிகரமாக முடிவடைந்து விட்டது .
சில சமயத்தில் இந்த தொடரின் கதைகளும் விறுவிறுப்பாக அமைந்ததால் ஜீ தமிழ் டிஆர்பி யில் டாப்பில் வந்துள்ளது. இதற்கிடையில் ஏற்கனவே இந்த சீரியலில் இருந்து ஏராளமான நடிகர்கள் மாற்றம் நடந்துள்ள நிலையில் இப்போது ஒரு தகவல் வைரலாகி வருகிறது. அதாவது இந்த தொடரில் ஹீரோ மற்றும் ஹீரோயினாக நடித்துவரும் மிர்ச்சி செந்தில்- நித்யா ராம் இருவரும் தொடரில் இருந்து விலகி விட்டதாக பரபரப்பு தகவல் இணையத்தில் வெளியாகி வருகிறது. ஆனால் இந்த தகவல் ஆனது முற்றிலும் பொய்யானது என்று சீரியல் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.