LATEST NEWS
ரஜினிக்கு மகளாக நடிக்க வாய்ப்பு….. இளம் பெண்ணிடம் கைவரிசை காட்டிய நபர்கள்….. அதிர்ச்சி சம்பவம்….!!!!

மும்பையை சேர்ந்த இளம் பெண் ஒருவரிடம் ரஜினி படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி 10 லட்சம் மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையை சேர்ந்த 21 வயதான மாடல் அழகி ஒருவரிடம் ரஜினிகாந்த் நடிக்கும் படங்களில் தான் நடிக்க வைப்பதாக கூறிய நபர் ஒருவர் அந்த பெண்ணிடம் இருந்து 10 லட்சம் ரூபாய்க்கு மேல் பணத்தை வாங்கி ஏமாற்றி உள்ளார். இது குறித்து அந்த பெண் தஹிசார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பெயரில் குற்றம் சாட்டப்பட்ட பியூஷ் ஜெயின் மற்றும் மந்தன் ரூபாரேலே ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக காவல்துறையினர் தெரிவித்ததாவது: “முன்னதாக மாடலிங் துறையில் பணியாற்றி வரும் பெண்ணிடம் நாங்கள் திரைப்பட தயாரிப்பாளர் என்று கூறிய இவர்கள் இருவரும், ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் அவருக்கு மகளாக நடிக்க வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்று தெரிவித்துள்ளனர். அது மட்டும் இல்லாமல் தெலுங்கு நடிகர் ராம்சரனின் அடுத்த படமான ஆர்சி 15 என்ற படத்திலும் முக்கிய கதாபாத்திரம் தருகிறேன் என்று தெரிவித்துள்ளனர்.
திரைப்பட ஆவணங்கள், தயாரிப்பதற்கான கட்டணம் மற்றும் பிற கட்டணங்கள் என்று கூறி 10,31,000 அந்த பெண்ணிடம் இருந்து பறித்துள்ளனர். தற்போது இருவர் மீது மோசடி மற்றும் போலி ஆவணம் தயாரித்தல் தொடர்பாக இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இளம் பெண்கள் யாரேனும் சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்று கூறினால் சற்று எச்சரிக்கையுடன் இருக்கும் படி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.