கோமாளி அரசே.! “இலவச அரிசிக்கு பாலிஷ் போட்டு சன்னக அரிசிக்கு ரூ.30-க்கு விற்பனையா..?” த.வெ.க அரசை ‘கோமாளி அரசு’ என சாடிய உதயநிதி ஸ்டாலின்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கோமாளி அரசே.! “இலவச அரிசிக்கு பாலிஷ் போட்டு சன்னக அரிசிக்கு ரூ.30-க்கு விற்பனையா..?” த.வெ.க அரசை ‘கோமாளி அரசு’ என சாடிய உதயநிதி ஸ்டாலின்..!!

Published

on

தமிழகத்தில் நிலவும் அரிசி விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த கூட்டுறவு அங்காடிகளில் சன்னரகப் பொன்னி அரிசி ரூ.30-க்கு விற்பனை செய்யப்படும் என்ற தற்போதைய அரசின் அறிவிப்பு ஒரு பெரும் ஏமாற்று வேலை என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளார். பொதுமக்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் இலவச ரேஷன் அரிசியையே பாலிஷ் போட்டு, சன்னரகப் பொன்னி அரிசி என்ற பெயரில் ரூ.30-க்கு விற்று இந்த அரசு கொள்ளையடிப்பதாகத் தமிழ்நாடெங்கும் பொதுமக்கள் குற்றம்சாட்டி, பல இடங்களில் அரிசியைத் திருப்பிக் கொடுத்து வருவதாக அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் மொத்தம் 2 கோடியே 28 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ள நிலையில், வெறும் 250 இடங்களில் மட்டுமே, அதுவும் குடும்பத்திற்கு தலா 5 கிலோ வீதம் இந்த பாலிஷ் செய்யப்பட்ட அரிசி வழங்கப்பட்டு வருவதாக உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மேலும் கம்பம் பகுதியில் இத்தகைய அரிசி வழங்கப்பட்டதால், பொதுமக்கள் த.வெ.க எம்.எல்.ஏ.-வை முற்றுகையிட்டுக் கேள்வி எழுப்பியபோது, அவர் கரூர் பாணியில் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளதாகவும் அவர் எள்ளி நகையாடியுள்ளார்.

Advertisement

2007-ஆம் ஆண்டு விலைவாசி உயர்ந்தபோது அன்றைய முதல்வர் கலைஞர், சிறப்பு பொதுவிநியோகத் திட்டம் மூலம் வெளிப்படையான டெண்டர் விட்டு மக்களுக்கு மானிய விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கியதை உதயநிதி நினைவு கூர்ந்துள்ளார். ஆனால் இந்த அரசு சன்னரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்ய எப்போது டெண்டர் விட்டது, டெண்டர் எடுத்த நிறுவனங்கள் எவை, என்ன விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டது மற்றும் எவ்வளவு மானியம் வழங்கப்படுகிறது போன்ற விவரங்களை எந்தவித பாலிஷும் போடாமல் வெளிப்படைத்தன்மையுடன் மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று அவர் த.வெ.க அரசிற்குச் சவால் விடுத்துள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in