LATEST NEWS
ஏற்கனவே 15 வயதில் மகள்.. நடிகை வரலட்சுமி சரத்குமாரின் மாப்பிள்ளை யார் தெரியுமா..? இணையத்தில் கசிந்த தகவல்..!!

நடிகை வரலட்சுமி சரத்குமார் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் கதாநாயகியாக அறிமுகமானார். சண்டை கோழி 2, சர்க்கார், விக்ரம் வேதா, தாரை தப்பட்டை, இரவின் நிழல் போன்ற படத்தில் வரலட்சுமி கதாபாத்திரம் மக்களை வெகுவாக கவர்ந்தது. இவர் முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் வரலட்சுமி சரத்குமாருக்கும் மும்பையை சேர்ந்த தொழிலதிபரான நிகேலாய் சச்தேவ் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பெற்றோர்கள் நெருங்கி உறவினர்கள் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திருமண தேதியை விரைவில் அறிவிப்பார்கள் என ராதிகா சரத்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் வரலட்சுமிக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை நிக்கோலய் சச்தேவ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அவர் மும்பையில் ஆர்ட் கேலரி நடத்தி வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 15 வயதில் ஒரு மகள் உள்ளாராம். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு நிக்கோலய் சச்தேவ் கவிதா என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் உள்ளார். அவருக்கு தற்போது 15 வயதாகிறது.
அதன்பிறகு கருத்து வேறுபாடு காரணமாக நிக்கோலய் சச்தேவ் தனது முதல் மனைவி கவிதாவை விவாகரத்து செய்துள்ளார். அதன் பிறகு வரலட்சுமி சரத்குமாருடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில் பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். அதன்படி நேற்று முன்தினம் இருவருக்கும் உறவினர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்தது. வரலட்சுமி திருமணம் செய்து கொள்ளப் போகும் நபர் ஏற்கனவே 15 வயது சிறுமிக்கு அப்பாவா என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.