“ஐயா எனக்கு சொந்தமா ஒரு வண்டி கூட இல்லீங்!” பேரவையில் உருக்கமாகப் பேசிய விசிக எம்.எல்.ஏ… “அள்ளிக் கொடுப்பார் முதலமைச்சர்” என சபாநாயகர் நெகிழ்ச்சி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஐயா எனக்கு சொந்தமா ஒரு வண்டி கூட இல்லீங்!” பேரவையில் உருக்கமாகப் பேசிய விசிக எம்.எல்.ஏ… “அள்ளிக் கொடுப்பார் முதலமைச்சர்” என சபாநாயகர் நெகிழ்ச்சி..!!

Published

on

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடந்த கூட்டத்தொடரில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) எம்.எல்.ஏ. ஜோதிமணி, “நான் 280 கி.மீ தூரத்தில் இருந்துதான் இங்கு வருகிறேன். எனக்குச் சொந்தமாக வண்டி, வாகனம் எதுவும் இல்லை. வாடகை வண்டியில் தான் வந்து போகிறேன். தொகுதி மக்களை நேரில் சென்று சந்தித்து அவர்களுக்குப் பணி செய்வதற்குக்கூட ஒரு வாகனம் இல்லாத சூழல் நிலவுகிறது. எனவே, எனக்கு ஒரு வாகன வசதி செய்து தர வேண்டும்” என முதலமைச்சருக்குத் தன் சொந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

சட்டப்பேரவையில் விசிக உறுப்பினர் முன்வைத்த இந்தக் கோரிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கவனமாகக் கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து பதிலளித்துப் பேசிய சபாநாயகர், “சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் முன்வைக்கும் கோரிக்கைகள் அனைத்தும் உடனுக்குடன் முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன” என்று குறிப்பிட்டார்.

Advertisement

https://twitter.com/polimernews/status/2087472306688057556/video/1

மேலும் முதலமைச்சரைப் பாராட்டிப் பேசிய சபாநாயகர், “முதலமைச்சரின் கரங்கள் கிள்ளி கொடுப்பவை அல்ல; மாறாக அள்ளிக் கொடுப்பவை. எனவே, நீங்கள் வைத்த இந்தக் கோரிக்கை கட்டாயம் பரிசீலிக்கப்பட்டு விரைவிலேயே நிறைவேற்றப்படும்” என உறுப்பினருக்குத் தைரியமும் நம்பிக்கையும் அளிக்கும் வகையில் உறுதியளித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in