VIDEOS
ஒருவேளை அப்படி இருக்குமோ?.. ஒரே நீச்சல் குளத்தில் கும்மாளம் போடும் விஜய் தேவரகொண்டா – சமந்தா.. வீடியோ பார்த்து கன்ஃபார்ம் பண்ண ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் தற்போது தெலுங்கில் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள குஷி திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா உடன் சேர்ந்து நடித்து முடித்துள்ளார். மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படம் நேற்று வெளியானது. இந்தத் திரைப்படத்தில் நடித்ததில் இருந்து சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் நெருக்கமாக பழகி வருகின்றனர்.
பல இடங்களில் இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களும் அடிக்கடி இணையத்தில் வெளியானது. இந்தத் திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கூட அரைகுறை ஆடையில் நெருக்கமாக ஆடிய நடன வீடியோக்கள் வெளியானது. அது மட்டுமல்லாமல் நள்ளிரவில் விஜய் தேவரகொண்டா சமந்தாவுக்கு போன் செய்து உன்னை ரொம்ப மிஸ் பண்றேன் என கூறியிருந்தார்.
மேலும் முகத்தை காட்டாமல் கையை மட்டும் இறுக்கமாக பிடித்துக் கொண்டு எடுத்த கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு காதலி இவர்தான் விரைவில் அறிவிப்பேன் என விஜய் தேவரகொண்டா கூறி இருந்தார். இந்நிலையில் தற்போது சமந்தா கலிபோர்னியாவுக்கு சுற்றுலா சென்று உள்ள நிலையில் அங்கு விஜய் தேவரகொண்டாவும் சென்று உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
இதனை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் நீச்சல் குளத்தில் குறித்த படி சமந்தா ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்த நிலையில் தற்போது அதே இடத்தில் விஜய் தேவர் கொண்டா இருக்கும் ஒரு வீடியோவும் வெளியாகி உள்ளது. இதனைப் பார்த்து ரசிகர்கள் இருவரும் ஒரே இடத்திற்குச் சென்றுள்ளதை உறுதிப்படுத்தி உள்ளனர்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க