VIDEOS
காரில் செல்லும்போது திடீர் விபத்தில் சிக்கிய விஜய் டிவி சீரியல் நடிகை.. காயங்களுடன் அவரே வெளியிட்ட வீடியோ.. ரசிகர்கள் ஷாக்..!!

விஜய் டிவியில் சில மாதங்களுக்கு முன்பு ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தான் முத்தழகு. அந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் அஞ்சலியாக நடித்துக் கொண்டிருப்பவர் தான் வைஷாலி தணிகா. இவர் சின்னத்திரைக்கு வருவதற்கு முன்பே சினிமாவில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான கதகளி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் சில படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் இவர் நடித்திருப்பார்.
குறிப்பாக மாலை நேரம் என்ற குறும்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் இவர் மிகவும் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான மாப்பிள்ளை மற்றும் ராஜா ராணி சீரியல்களில் நடித்ததன் மூலம் இவர் நல்ல வரவேற்பை பெற்றார். அதனைத் தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கோகுலத்தில் சீதை மற்றும் மகராசி உள்ளிட்ட சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் விபத்தில் சிக்கி நூலிலையில் உயிர்தப்பிய விஷயத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். தென்காசியில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் போது விபத்து ஏற்பட்டதாகவும் சீட் பெல்ட்-உம் ஹேர் பேக்சும் அவரது உயிரை காப்பாற்றியதாகவும் அவர் வீடியோவில் கூறியுள்ளார். அவரது கழுத்தில் பலமான காயம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க